ads
ஆர்யாவின் பிறந்தநாளான இன்று சூர்யாவின் சர்ப்ரைஸ்
ராசு (Author) Published Date : Dec 11, 2017 13:33 ISTபொழுதுபோக்கு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த ‘ஹர ஹர மஹாதேவகி’ காமெடி படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. இந்த படத்தினை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருந்தார் . இதனை தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற மற்றொரு காமெடி படத்தினை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இதற்கு அடுத்த படியாக ஆர்யா நடிப்பில் 'கஜினிகாந்த்' என்ற படத்தினை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சில நாட்களுக்கு முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிலையில் ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் நாயகியாக வனமகன், ஜூங்கா புகழ் சாயிஷா சைகல் ஒப்பந்தமாகியுள்ளார்.