ads

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

studio green new announcement

studio green new announcement

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பின் கீழ் நடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  'தானா சேர்ந்த கூட்டம்' படத்தினை தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது அடுத்த அறிவிப்பை இன்று வெளியிடுவதாக தெரிவித்திருந்தது. 

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அடுத்ததாக நடிகர் ஆர்யாவை கதாநாயகனாக வைத்து படமாக உள்ளார்.ஆர்யாவின் பெயரிடப்படாத இந்த படத்திற்கு தற்போது 'கஜினிகாந்த்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது. இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தற்போது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புது படத்தினை துவங்க இருப்பதாக தகவ்கள் வெளியாகிறது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு