தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்

       பதிவு : Nov 27, 2017 11:27 IST    
thaana serntha kootam movie updates thaana serntha kootam movie updates

2டி என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தின் கதாநாயனாக சூர்யா, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

மேலும் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவுள்ளது. இந்த படத்தின் டீசர் வருகிற 30-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு 'கேங்' என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 

 


தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்