ads
தானா சேர்ந்த கூட்டம் படத்தினை கைப்பற்றிய பிரபல வெளிநாட்டு நிறுவனம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 09, 2017 19:55 ISTபொழுதுபோக்கு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கான வியாபார வேலைகளும் சூடுபிடித்துள்ளது. ‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா படத்தினை தயாரித்துள்ளார். இவர் தற்பொழுது படத்தினை பற்றிய முக்கிய தகவலை பகிர்ந்திருக்கிறார்.
இதில் படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல TSR FILMS நிறுவனம் கைபற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற விவேகம், மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் அனைத்தையும் இந்த நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிட தக்கது. இந்த படங்களை தொடர்ந்து தனா சேர்ந்த கூட்டம், அருவி போன்ற படங்களை அடுத்தடுத்து கைப்பற்றி இருக்கிறது.