ஒரு கோடியை தொட்ட சூர்யாவின் சொடக்கு பாடல்

       பதிவு : Dec 08, 2017 11:40 IST    
sodakku song hit 10 million views sodakku song hit 10 million views

சிங்கம் 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே பாலாஜி, கார்த்திக், தம்பி ராமையா, சத்யன் உட்பட பலர் நடித்துள்ளனர்.    

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் பிறந்த நாள் அன்று நள்ளிரவில் வெளியிட்ட 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானதை தொடர்ந்து 1 கோடி பார்வையாளர்களை கவர்த்திருப்பதாகவும் தகவல் அதிகார பூர்வமாக வெளிவந்துள்ளது. இந்த பாடலின் வரிகளை மணி அமுதவன், இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருப்பது குறிப்பிட்ட தக்கது.      

 

மேலும் இந்த படத்தின் டீசர் உலகளவில் ட்ரெண்டானதை தொடர்ந்து 70 ஆயிரம் முறை ரீ-ட்விட் செய்து பாலிவுட் முன்னணி நடிகர்களான சல்மான், ஷாருக்கை பின்னுக்கு தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் போஸ்டர், டீசர், பாடல் என வெளியிட்ட அனைத்துமே ட்ரெண்டானதில் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.


ஒரு கோடியை தொட்ட சூர்யாவின் சொடக்கு பாடல்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்