ads
ட்ரெண்டாகும் சூர்யாவின் வசனம்
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 02, 2017 10:10 ISTபொழுதுபோக்கு
சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'தான சேர்ந்த கூட்டம்' படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், நந்தா, கலையரசன் மற்றும் சிலர் முக்கிய வேடத்தில் இவர்களுடன் இணைந்துள்ளனர். இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பினை பெற்று வருகிறது.
அனிருத் இசையில் வெளிவந்த 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் பெற்றதோடு வலைதளத்தில் அதிகளவு ட்ரெண்ட் ஆனதினை தொடர்ந்து டீசரில் இடம் பெற்ற 'தகுதியே இல்லாதவன் எல்லாம் இங்க, தகுதி இருக்குறவன் எல்லாம் எங்க' 'ஒருத்த பணக்கரான இருக்க...ஒரு கோடி பேரு பிச்சைக்காரனா இருக்காங்க..., 'போலீஸ் எல்லாம் நிறையா பாத்தாச்சி.....இப்ப அப்படியே வேற ட்ராக்' இந்த வசனத்தை சூரியா ரசிகர்கள் தற்பொழுது வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.