ads
ஜிவியின் புது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு
ராதிகா (Author) Published Date : Jan 22, 2018 11:07 ISTபொழுதுபோக்கு
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த 2017 மார்ச் மாதத்தில் வெளிவந்த 'புரூஸ் லீ' படத்தினை தொடர்ந்து சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் 'அடங்காதே', வள்ளிகந்த் இயக்கத்தில் 'செம', வெங்கட் பக்கர் இயக்கத்தில் '4ஜி', ரவி அரசு இயக்கத்தில் 'ஐங்கரன்', பாலா இயக்கத்தில் 'நாச்சியார்', பாபா பாஸ்கர் இயக்கத்தில் 'குப்பத்து ராஜா', எம்.எம்.சந்திரமௌலி இயக்கத்தில் '100% காதல்', ராஜிவ் மேனன் இயக்கத்தில் 'சர்வம் தாள மாயம்' போன்ற பல படங்களில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார். இவற்றின் சில படங்களின் போஸ்டர், டீசர், ரிலீஸ் தேதி போன்றவை வெளியிட்டுள்ளனர். இதில் பாலா இயக்கி வரும் 'நாச்சியா'ர் படத்தில் லோக்கல் கெட்டப்பில் குப்பத்து ராஜாவாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகை ஜோதிகாவிடம் முதல் முறையாக ஜிவி இணைந்திருப்பது குறிப்பிட தக்கது. மேலும் இளையராஜா இசைக்கு இந்த படத்தில் ஒரு பாடலையும் ஜிவி பாடியுள்ளார்.
இந்த ஆண்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜிவி பிரகாஷ் குமாரின் சில படங்கள் இறுதி நிலையை அடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எம்.எம்.சந்திரமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் '100% காதல்' படத்தின் படப்பிடிப்புகள் 90% முடிவடைந்து இருப்பதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டதோடு படத்தின் புது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த படம் கடந்த 2011-இல் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற '100% லவ்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிட தக்கது. இந்த ரீமேக் படத்தினை கிரியேஷன் சினிமாஸ் சிவி, என்ஜெ என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சுகுமார் மற்றும் புவனா தயாரிக்க, டூடுலி ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை சுகுமார் எழுதியுள்ளார்.
இந்த படத்தில் ஜிவி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் வெளிவந்து வெற்றியை பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தற்பொழுது '100% காதல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். மேலும் சரித்திரம் சார்ந்த 'மகாநதி' படித்திலும், ஜீவா நடிக்கவிருக்கும் 'கொரில்லா' படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். ஜிவியின் 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிப்பதோடு இசையமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் இருந்து கடந்த நாட்களில் வெளிவந்த போஸ்டரில் ஏப்ரல் மாதத்தில் படத்தினை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் வெளியிட்ட போஸ்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
100% kaadhal shoot