ads

நடிகர் ஜிவி பிரகாஷின் '100% காதல்' புது போஸ்டர்

100 percent kaadhal new movie poster

100 percent kaadhal new movie poster

இயக்குனர் எம்எம் சந்திரமௌலி இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் '100% காதல்'. இந்த படத்தை கிரியேஷன் சினிமாஸ் சிவி, என்ஜெ என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சுகுமார் மற்றும் புவனா தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு சுகுமார் திரைக்கதை எழுதியுள்ளார். நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் இசையமைக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு டூடுலி ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். கடந்த 2011-இல் தெலுங்கில் வெளிவந்த '100% லவ்' என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. 

முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. நடிகர் ஜிவி பிரகாஷின் புது போஸ்டருக்கு அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் ஏப்ரலில் வெளிவருவதாக படக்குழு போஸ்டரில் தெரிவித்துள்ளது. இவர் நடிப்பில்  `செம', `அடங்காதே', `நாச்சியார்', `குப்பத்து ராஜா' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. மேலும்  `4ஜி', `ஐங்கரன்', `100% காதல்', `ரெட்ட கொம்பு', `சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். 

100 percent kaadhal new movie poster100 percent kaadhal new movie poster

நடிகர் ஜிவி பிரகாஷின் '100% காதல்' புது போஸ்டர்