ads

ஒக்கி புயல் பாதிப்பிற்கு உதவி செய்ய நடிகர் ஜிவி பிரகாஷ் ட்விட்

gv prakash tweet about ockhi cyclone

gv prakash tweet about ockhi cyclone

ஒக்கி புயல் காரணத்தினால் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் சீர்குலைந்து காணப்படுகிறது. இதன் காரணத்தினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு ஏற்பட்ட காற்றுடன் கூடிய கனமழையினால்  வீடுகள் அனைத்தும் நிலை குலைந்துள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் பள்ளிகளில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் நடிகர், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பின்வருமாறு அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.       

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டிருக்கிற கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு அரசு அடிப்படை உதவியும் போர்க்கால உதவியில் உடனடியாக உதவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். அதே போன்று சென்னையில் ஏற்பட்ட போது பல்வேறு இடங்களில் இருந்த மக்கள் ஜாதி மதம் பாராமல் உதவு செய்தார்கள். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு செயலை செய்து ஒரு பெரிய யூனிட்டை காண்பித்தோம். அதே போன்று நம்முடைய கன்னியாகுமாரி, நெல்லை மாவட்ட சொந்தங்களுக்கு உதவி கரண் நீட்ட வேண்டும். நானும் உதவி செய்கிறேன், நீங்களும் உதவி பண்ணுங்க... என்று வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார்.     

ஒக்கி புயல் பாதிப்பிற்கு உதவி செய்ய நடிகர் ஜிவி பிரகாஷ் ட்விட்