ads

ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாள மயம்'

sarvam thaala mayam movie first look

sarvam thaala mayam movie first look

நடிகர் ஜி.வி.பிரகாஷ் 'புரூஸ் லி' படத்திற்கு பிறகு தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அடங்காதே, செம, 4ஜி, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், 100% காதல், சர்வம் தாள மாயம், கோபம், ரெட்டை கொம்பு போன்று அடுத்தடுத்து அவருக்கு படங்கள் வரிசையில் காத்திருக்கிறது. இதில் தற்போது 'சர்வம் தாள மாயம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சார கனவு போன்ற இரு படங்களை இயக்கியுள்ளார். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக ராஜிவ் மேனன், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'சர்வம் தாள மயம்' படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக வளம் வரவுள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் 9 பாடல்களின் கம்போசிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் தொடக்க காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை வரும் பின்னணி இசையை (BGM) முடித்துள்ளார். பாரம்பரிய இசைக்கும் இன்றைய நாகரிக உலகின் இசையான ஹிப் ஹாப் போன்ற இசைக்கும் இடையேயான மோதல் தான் படத்தின் மைய கதை. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது.

sarvam thaala mayam movie first looksarvam thaala mayam movie first look

ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாள மயம்'