மீண்டும் கைகோர்க்கும் 'திரிஷா இல்லனா நயன்தாரா' படக்குழு

       பதிவு : Nov 14, 2017 09:20 IST    
மீண்டும் கைகோர்க்கும் 'திரிஷா இல்லனா நயன்தாரா' படக்குழு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் 'திரிஷா இல்லனா நயன்தாரா'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், ரோபோ சங்கர், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் 'ஏஏஏ' படம் வெளிவந்தது. இந்த படம் தோல்வியடைந்ததால் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. 

இந்நிலையில் தற்போது 'திரிஷா இல்லனா நயன்தாரா' படக்குழு மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தை 3டி கேமிராவில் இயக்கவுள்ளதாகவும் காதலை மையமாக கொண்டு இயக்க இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அரண்மனை படத்தை தயாரித்த தினேஷ் விஷன் ஐ மீடியா சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

 


மீண்டும் கைகோர்க்கும் 'திரிஷா இல்லனா நயன்தாரா' படக்குழு


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்