ads

ஜிவி படத்தில் நா முத்துக்குமார் பாடல்

na muthukumar song in gv prakash movie

na muthukumar song in gv prakash movie

மின்னசர கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டே படங்களை தொடர்ந்து  ராஜிவ் மேனன் இயக்கி வரும்  'சர்வம் தளமயம்'  படத்தின்  ஜிவி.பிரகாஷ் நாயகனாக நடித்து வருகிறார். படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறே இசைக்கு முக்கியத்தும் குடுக்கும் வகையில் பாடல்கள் அமையவுள்ளது. மைன்ட் ஸ்கிரீன்ஸ் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் ராஜிவ் மேனனின் மனைவி லதா தயாரிக்கும் இப்படத்தில் ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.      

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட 'குற்றப்பத்திரிகை' படத்தில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்த ரவி யாதவ் இந்த படத்தில் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். படத்தின் பாடல் வரிகள் மதன் கார்க்கி, அருண் ராஜா எழுதியுள்ளனர். இந்நிலையில் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதிய பாடல்களும் இடம் பெற்றிருப்பது  படத்தின் மிக பெரிய டிவிஸ்ட் ஆகும்.       

ஜிவி படத்தில் நா முத்துக்குமார் பாடல்