ads

மீனவர்களுக்கு குரல் கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ்

gv prakash supporting fishermen

gv prakash supporting fishermen

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களுக்கு திரையுலகில் இருந்து நடிகர், இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் பெரிதும் குரல் கொடுத்து வருகிறார். இந்த அடிப்படையில் மீனவ குடுப்பதினை நேரில் சென்று ஆறுதல் கூறுதல், அவர்களுக்கு தேவையான உதவி செய்தல் போன்றவைகளோடு, இவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று நண்பர்கள், ரசிகர்கள், அரசாங்க துறையினிடம் அவரது சமூக வலைத்தளத்தின்  மூலம் தகவலை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.        

அதில்  "நம் தமிழ் மீனவர்களுக்கு GPS, Radar, Satellite phone போன்ற கருவிகள் மானியத்திலும் தவணை முறையிலும் அரசு வழங்க வேண்டும். இதை பொருத்துவது கட்டாயமாக்க பட வேண்டும் என்று அரசிடம் சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன். இதில் அணைந்து மீனவ கூட்டமைப்புகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

Satellite phone - விமானங்களின் வருகையை ஊகிக்க உதவும் சாதனம், 

Radar - செயற்கைக்கோள் தொலைபேசி,

GPS -இடங்காணல் கருவி இதன் மூலம் கடலுக்குள் காணாமல் போன மீனவர்களை கண்டறிவதற்கு சுலபமான வழி என்பதினால் ஜிவி இந்த கருவிகளை வலியுறுத்தியுள்ளார்.   

மீனவர்களுக்கு குரல் கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ்