நடிகை ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் மேனேஜர் முனுசாமி புகார்

       பதிவு : Mar 14, 2018 15:23 IST    
ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் முனுசாமி என்பவர் நடிகர் சங்கத்தில் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார். ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் முனுசாமி என்பவர் நடிகர் சங்கத்தில் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா 2001-ஆம் ஆண்டு முதல் சினிமா துறையில் நடித்து வருகிறார். இவர் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபலமானவர். இவர் தமிழில் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தற்போது வரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் இறுதியாக 'குலேபகாவலி' படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் 'துப்பாக்கி முனை' படத்திலும், நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் முன்னதாக 'டார்லிங்' படத்தை இயக்கியவர். இவருடைய இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் இந்த படமும் பேய் படமாக உருவாகி வருகிறது.

 

இந்நிலையில் தற்போது நடிகை ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், தற்போது வரை பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை. தயவு கூர்ந்து அதை பெற்று தரும்படியும் மனு அளித்துள்ளார். இவர் முன்னதாக நடிகை சிம்ரன், மாளவிகா ஆகியோருக்கு மேனேஜராக பணிபுரிந்துள்ளார்.


நடிகை ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் மேனேஜர் முனுசாமி புகார்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்