ads

பஞ்சுமிட்டாய் ட்ரைலரை வெளியிடும் மீசையை முறுக்கு நாயகன்

panjumittai movie trailer revealed by adhi

panjumittai movie trailer revealed by adhi

கடலை, அட்டி படத்தினை தொடர்ந்து மா.க.ப ஆனந்த் 'பஞ்சுமிட்டாய்' படத்தில் எஸ்.பி.மோகன் இயக்கத்தில் நடித்து வருகிறார். காமெடிகள் மையமாக வைத்து உருவாக்கிவுள்ள இந்த படத்தில் நிஹிலா விமல் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் KV, கணேஷன், வினோத் குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.      

தீபன் சினிமா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மகேஷ் கே தேவ் ஒளிப்பதிவு மற்றும் ராம் சுந்தரசன் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர். படத்தின் முக்கிய வேடங்களில் சென்ராயன், பாண்டியராஜன், பாண்டு, பாரதிமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மிசையமுறுக்கு நாயகன், இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

 இதனை அடுத்து மா.க.ப.ஆனந்த், மார்ட்டின் இயக்கி வரும் 'மாணிக்' படத்தில் நடித்து வருகிறார். மா.க.பாக்கு ஜோடியாக சூசா குமார் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, மனோ பலா போன்றவர்கள் நடித்து வருகின்றனர்.        

 

பஞ்சுமிட்டாய் ட்ரைலரை வெளியிடும் மீசையை முறுக்கு நாயகன்