ads
சிவகார்த்திகேயன் நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் ஆதி
மீனா ஸ்ரீ (Author) Published Date : Aug 06, 2018 17:50 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயனின் 11வது படமான 'சீம ராஜா' வரும் செப்டம்பர் 13இல் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகவுள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வரிசையில் இந்த படமும் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் 12வது படம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் த்ரில்லராக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் 13வது படத்தை கலகலப்பான இயக்குனரான ராஜேஷ் இயக்க உள்ளார். இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி இந்த படத்தின் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய இசையமைப்பில் முன்னதாக வெளியான 'கலகலப்பு 2' படத்தின் பாடல்கள் தற்போது வரையிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் 13வது படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் வேலைக்காரன் படத்தினை தொடர்ந்து இந்த படத்திலும் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
.@hiphoptamizha to score music for our @Siva_Kartikeyan anna's #SK13 🤩#HHTAdhiJoinsSK13 @rajeshmdirector @StudioGreen2 pic.twitter.com/CWSLNhTsdq
— ragulparasuram (@ragulparasuram) August 6, 2018