ads
விஜய் சேதுபதி படத்தில் ஒன்று சேரும் அப்பா மகன்கள்
வேலுசாமி (Author) Published Date : Jan 26, 2018 15:52 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் பிப்ரவரி 2-ஆம் தேதி 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'சூப்பர் டீலக்ஸ்', இயக்குனர் மோகன் இயக்கத்தில் 'ஜூங்கா', இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் '96', இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'சீதக்காதி', இடம் பொருள் ஏவல், இமைக்கா நொடிகள், மேலும் தெலுங்கில் நடிகர் மற்றும் இயக்குனரான ராம் சரண் இயக்கத்தில் 'சையிறா நரசிம்ம ரெட்டி', இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'மாமனிதன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் வரலாற்று சார்ந்த கதை எனவும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக எடுக்கப்படுகிறது எனவும், இந்த படம் பிரபலமான அரசியல் பிரமுகரின் வரலாற்று படம் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி அரசியல் வாதியாக நடிக்க உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சொந்த நிறுவனமான வைஎஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இந்த படத்தில் இசையமைக்க உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் ஒரே படத்தில் இணைவது இதுவே முதன் முறையாகும். இதற்கான அறிவிப்பை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
On this honourable happy occasion we @YSRfilms are delighted to announce our next project with my father Ilayaraja,brother Karthikraja and myself scoring music together for the first time for my production venture #Maamanidhan staring @i_vijaysethu directed by @seenuramasamy
— Yuvanshankar raja (@thisisysr) January 26, 2018