இரவுக்கு ஆயிரம் கண்கள் படக்குழுவினரின் இசை வெளியீட்டு விழா

       பதிவு : Feb 04, 2018 12:42 IST    
iravukku aayiram kangal movie audio launch on february 9th iravukku aayiram kangal movie audio launch on february 9th

நடிகர் அருள்நிதி நடிப்பில் தற்போது இரவுக்கு ஆயிரம் கண்கள், புகழேந்தி எனும் நான் ஆகிய  படங்கள் உருவாகி வருகிறது. இதில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை புதுமுக இயக்குனரான மு மாறன் இயக்கி வருகிறார். இவர் நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் கேவி ஆனந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது இவருடைய இயக்கத்தில் வெளிவரும் முதல் படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. முன்னதாக இந்த படத்தின் ட்ரைலரை  படக்குழு வெளியிட்டது.

இந்த ட்ரைலருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 9-ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் உதயநிதி, மஹிமா நம்பியார், சாயா சிங், வித்யா பிரதீப், ஆனந்த் ராஜ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இரவில் நடக்கும் சம்பவத்திற்கும், இரவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். அப்படி நடைபெறும் பிரச்சனையில் இருந்து ஒரு சாதாரண மனிதன் எப்படி தப்பிக்கிறான் என்பதே ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி த்ரில்லர் படமாக 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

iravukku aayiram kangal movie audio launch on february 9thiravukku aayiram kangal movie audio launch on february 9th

இரவுக்கு ஆயிரம் கண்கள் படக்குழுவினரின் இசை வெளியீட்டு விழா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்