ads

சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்

கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்த

கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்த

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஜய், தற்போது வரை 61 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'மெர்சல்'. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு தனது 63வது படத்திற்கு மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்த 'மெர்சல்' படம் சர்வதேச விருது விழாவுக்கு தேர்வாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு IARA விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான IARA விருது பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரண்டு விருதுகளுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 'மெர்சல்' படத்தின் மூலம் தேர்வாகியுள்ளார். இந்தியாவில் பல விருதுகளை குவித்த 'மெர்சல்' படம் தற்போது சர்வதேச விருதுக்கும் தேர்வாகியிருப்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமையாகும்.

இந்த IARA சர்வதேச விருதில் தேர்வாகியுள்ள நடிகர்களுக்கு வாக்களிக்கும் நேரம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி IARAவின் இணையதளத்தில் ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களுக்கு வாக்களிக்கலாம். வாக்களிக்கும் கடைசி தேதி ஆகஸ்ட் 10ஆம் தேதியாகும். இந்த தகவல் அறிந்து விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மேலும் ஒரு IP/email க்கு ஒரு வாக்கு மட்டுமே அளிக்க முடியும்.

மெர்சல் படத்தின் மூலம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் விருதுக்கு விஜய் தேர்வாகியுள்ளார்.மெர்சல் படத்தின் மூலம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் விருதுக்கு விஜய் தேர்வாகியுள்ளார்.

சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்