கலகலப்பு 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு

       பதிவு : Nov 14, 2017 19:01 IST    
கலகலப்பு 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு

சுந்தர் சி இயக்கிவரும் 'கலகலப்பு 2' படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடியில் தொடங்கி காசி, இந்தூர், புனே மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் எடுக்கப்பட்டு வருகின்றது. படப்பிடிப்புகள் எடுக்கப்படும் போது அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது படக்குழுவினரின் ட்ரெண்டாக இருந்தது வருகிறது. இந்நிலையில் காரைக்குடி, காசி போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். 

காமெடிகள் அதிகளவு இடம் பெற்றுள்ள இப்படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முக்கிய வேடத்திலும், இவர்களுடன் இணைந்து ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

 

சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க உள்ளார். அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.    


கலகலப்பு 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்