ads

பாடல் காட்சிக்காக பழைய வீட்டை அணுகியுள்ள களவாணி 2 படக்குழு

சூரிக்கு பதில் ஆர்ஜே விக்னேஷ் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

சூரிக்கு பதில் ஆர்ஜே விக்னேஷ் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

கடந்த 2010இல் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'களவாணி'. இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் மூலம் ஓவியா நாயகியாக அறிமுகமானார். இந்த படம் இயக்குனர் சற்குணத்தின் முதல் படம். இந்த படத்திற்கு பிறகு வாகை சூடவா, நையாண்டி, சண்டி வீரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவருடைய இயக்கத்தில் களவாணி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்திலும் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் தற்போது இந்த படத்தின் காமெடியனாக மீசைய முறுக்கு ஆர்ஜே விக்னேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் காமெடி நடிகராக சூரி நடித்திருந்தார். தற்போது நடிகர் சூரி அதிகப்படியான படங்களில் நடித்து வருவதால் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.

தற்போது சூரிக்கு பதிலாக ஆர்ஜே விக்னேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு காமெடியனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு பாடல் காட்சிக்காக பழைய வீட்டினை அணுகி அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். வரும் ஜூன் 22ஆம் தேதியுடன் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளையும் படக்குழு முடிக்க உள்ளது. இதன் பிறகு இந்த படமும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல் காட்சிக்காக பழைய வீட்டை அணுகியுள்ள களவாணி 2 படக்குழு