ads

சங்கரின் இந்தியன் 2வில் கமல் ஹாசனின் வித்தியாசமான கெட்டப்

சங்கரின்

சங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பினை வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆந்திர பிரதேசத்தில் துவங்க உள்ளனர்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன் தற்போது சினிமா மற்றும் அரசியல் போன்ற இரண்டு துறைகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது மக்கள் நீதி மய்ய கட்சியில் ஏராளமான தன்னார்வலர்களை இணைத்து தேர்தலை சந்திக்கும் பணியில் களமிறங்கியுள்ளார். மறுபுறமும் அவருடைய சினிமா வாழ்க்கையில் அடுத்த படத்திற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' வில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை துவங்க உள்ளனர்.

இந்த படத்திற்காக கமல் ஹாசன் தனது உடல்கட்டை குறைத்து வித்தியாசமான கெட்டப்பை காண்பிக்கும் விதமாக தீவிர உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார். இதனால் இவருக்கு அமெரிக்காவை சேர்ந்த பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். உடலமைப்பினை தயார் செய்து விட்டு டிசம்பரில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். 

சங்கரின் இந்தியன் 2வில் கமல் ஹாசனின் வித்தியாசமான கெட்டப்