ads

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் 'இந்தியன் 2'. 1996இல் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகளை ஒரு வழியாக படக்குழு துவங்கியுள்ளது. இதற்கான வேலைகளை கலை இயக்குனரான டி முத்துராஜ் மேற்கொள்கிறார். இவர் முன்னதாக இயக்குனர் ஷங்கருடன் இணைந்து ஐ மற்றும் 2.0 படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

இதன் பிறகு விரைவில் படப்பிடிப்பு பணிகளையும் துவங்கவுள்ளனர். இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் ஹாசன் நடிக்க உள்ள காட்சிகள் அனைத்தும் போலந்து மற்றும் உக்ரைன் போன்ற இடங்களில் படமாக்க உள்ளனர். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் கமல் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்