ads

விஸ்வரூபம் 2 படத்தில் டப்பிங் துவங்கிய உலகநாயகன்

kamal haasan start dubbing for viswaroopam 2

kamal haasan start dubbing for viswaroopam 2

கடந்த 2003ம் ஆண்டில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த 'விஸ்வரூபம்' படம் பல எதிர்ப்புகளின் மத்தியில் வெளிவந்து ரசிகர்கள், விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தினையும் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனதின் மூலம் அவரே தயாரிப்பதோடு எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி  வருகிறார். ஹாலிவுட் படத்திற்கு  நிகரான எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைத்துள்ளனர்.     

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்பொழுது முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகி உள்ள 'விஸ்வரூபம் 2' படத்தில் தற்பொழுது டப்பிங் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இப்படத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் முன்னதாகே டப்பிங் பணியை முடிவடைந்த நிலையில்  தற்பொழுது தமிழ் மொழியில் டப்பிங்கை படக்குழு துவங்கியுள்ளது. இதில் கமல்ஹாசன் அவரது காட்சிகளுக்கு டப்பிங் பணியை முதல் முதலாக துவங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் டப் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசைக்கு ஆண்ரியா ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் படத்தின் பாடல்கள் அனைத்தையும் வருகிற பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர் போன்றவை வெளியிடும் தேதியை அதிகார பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.   

விஸ்வரூபம் 2 படத்தில் டப்பிங் துவங்கிய உலகநாயகன்