ads

கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைவிமர்சனம்

விஸ்வரூபம் 2 படத்தின் திரைவிமர்சனம்

விஸ்வரூபம் 2 படத்தின் திரைவிமர்சனம்

நடிகர் கமல் ஹாசனின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் இன்று தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வரூபம் 2'. இந்த படம் கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 5வது படம். கடந்த 2013இல் வெளியான 'விஸ்வரூபம்' படத்தின் தொடர்ச்சியாக 'விஸ்வரூபம் 2' வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கமல் ஹாசன், இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரிடம் பயிற்சி பெற்று வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

ஒரு முறை இந்திய ராணுவத்தின் எல்லையை விட்டு வெளியே சென்றதற்காக கமல் ஹாசன் கைது செய்யப்படுகிறார். பின்பு சிறையில் இருக்கும் அவர் தப்பித்து ரகசியமாக தனது வேலைகளை பார்க்கிறார். இதனால் இவர் இந்தியாவின் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக அறிவிக்கப்படுகிறார். பின்னர் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வரும் இவர், ரகசியமாக தன் வேலைகளை கவனிக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டை தகர்க்க பூஜா குமாரை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்பது பூஜா குமாருக்கு தெரிய வருகிறது. ஆனாலும் அவரை தன் மனதிற்குள் காதலிக்கிறார். பின்பு அல்கொய்தா தீவிரவாதி தலைவரான ராகுல் போஸ், இந்தியா மற்றும் லண்டனிலும் வெடிகுண்டுகளை வைக்க அதனை தகர்க்க கமல் தனது குழுவுடன் புறப்படுகிறார்.

 இறுதியாக இந்த இரண்டு வெடிகுண்டையும் கமல் தகர்த்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் கமல் ஒரு நடிகர் மற்றும் இயக்குனராகவும் தன்னுடைய சிறப்பான பணியை செய்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக செல்லும் இந்த படத்தின் ஒரு கட்டத்தில் ரசிகர்களை குழப்பம் அடைய செய்கிறார். கமல் ஹாசன் படம் என்றாலே இரண்டு, மூன்று முறை பார்த்தால் தான் படத்தின் கதை அறிய வரும். அது அவருடைய வழக்கமான நடைமுறை.

இந்த படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கமல், எழுத்தாளராக அரசியல் வசனங்களை நுழைத்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனின் அடுத்தடுத்த ரூபங்கள் என்னவென்று இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிப்ரானின் இசையமைப்பு பக்க பலமாக இருக்கிறது. மொத்தமாக விஸ்வரூபம் 2 ஒரு மிஷன் இம்பாஸிபிள் தமிழ் வர்சன் என்றே சொல்லலாம்.

கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைவிமர்சனம்