கார்த்தி வெளியிட்ட பரத்தின் காளிதாஸ் பர்ஸ்ட் லுக்

       பதிவு : Jan 19, 2018 14:22 IST    
karthi release kaalidas movie first look poster karthi release kaalidas movie first look poster

இயக்குனர் சங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பரத், இதனை தொடர்ந்து செல்லமே, காதல், பிப்ரவரி 14, பட்டியல் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதில் விஷாலின் செல்லமே படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்திருந்தார். 2004-ஆம் ஆண்டு வெளியான 'காதல்' படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படம் இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் இன்றளவும் பேசும் படமாக அமைந்துள்ளது. இவருடைய நடிப்பில் சிம்பா, பொட்டு போன்ற படங்கள் அடுத்து வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் 'காளிதாஸ்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மற்றும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் ஆன சிவநேசன் தயாரிக்கிறார். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக மலையாள நடிகையான அன் ஷீத்தல் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சுரேஷ் மேனன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பரத் காவல்துறை அதிகாரியாக நடிக்கும்  இந்த படம் திரில்லர் மற்றும் இன்வெஸ்டிகேஷன் சார்ந்ததாக உருவாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 'தீரன் அதிகாரம் ஒன்று' கார்த்தி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குனர் பாண்டியராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

karthi release kaalidas movie first look posterkarthi release kaalidas movie first look poster

கார்த்தி வெளியிட்ட பரத்தின் காளிதாஸ் பர்ஸ்ட் லுக்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்