ads

சூர்யா கார்த்தி கூட்டணியில் கடைக்குட்டி சிங்கம்

karthi new movie kadaikutty singam first look poster

karthi new movie kadaikutty singam first look poster

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்பொழுது இயக்குனர்கள் பாண்டிராஜ், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜை கடந்த நாட்களில் நடந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் சூர்யாவிற்கு சொந்தமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்து வரும் இப்படத்தில் சாயீஷா, பிரியா பவானி ஷங்கர் என இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் முக்கிய வேடத்தில்  சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா போன்றவர்கள் இணைந்துள்ளனர்.   

இந்நிலையில் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டைட்டிலை தமிழில்  ‘கடைக்குட்டி சிங்கம்’ என்றும் தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்றும் டைட்டில் வைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த டைட்டிலை நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இப்படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.    

karthi new film title releasekarthi new film title release
actor karthi new film titleactor karthi new film title

சூர்யா கார்த்தி கூட்டணியில் கடைக்குட்டி சிங்கம்