தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம் பெற்ற காமெடி

       பதிவு : Jan 13, 2018 10:45 IST    
thaana serntha kootam sneak peek thaana serntha kootam sneak peek

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முதல் முறையாக இணைந்துள்ள இந்த ஜோடியுடன் ‘நவரச நாயகன்’ கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், மீரா மிதுன், கலையரசன், நந்தா உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.  
 
வருமான வரித்துறையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில்அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகவும்,  ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் இணைந்துள்ளனர். ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் இந்த படத்தில் இடம் பெற்ற யோகி பாபு, சூர்யா, கீர்த்தி சுரேஷ் அவர்களின் ஒரு காமெடி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த காமெடியில் யோகிபாபுவின் வசனம் ரசிகர்களுக்கு கூடுதல் நகைச்சுவையை தந்துள்ளது.      


தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம் பெற்ற காமெடி


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்