ads

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைவிமர்சனம்

thaana serntha kootam movie reviews

thaana serntha kootam movie reviews

சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக இணைந்து நடித்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தம்பி ராமையா வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறார். அவருடைய மகனாக சூர்யா நடித்துள்ளார். எப்படியாவது அப்பா வேலைபார்க்கும் துறையில் உயர் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக எடுத்து அதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

சுரேஷ் மேனன் வருமான வரித்துறையின் தலைமை அதிகாரியாக நடித்துள்ளார். வருமான வரி சோதனை நடத்தப்படும் இடங்களில் சுரேஷ் மேனன் லஞ்சம் வாங்கி வருகிறார். இதனை கவனிக்கும் தம்பி ராமையா உயர் அதிகாரிகளுக்கு சுரேஷ் மேனனை பற்றி எழுதி மொட்டை கடுதாசி அனுப்புகிறார். இதனை அறிந்த சுரேஷ் மேனன், தம்பி ராமையா மீது இருந்த கோபத்தில் சூர்யாவை வருமான வரித்துறையின் தேர்வில் இருந்து அவமான படுத்தி அனுப்புகிறார். இதனால் சூர்யா மனமுடைந்து போக, மறுபுறம் பணம் இல்லாத ஒரே காரணத்தால் கலையரசனுக்கு போலீஸாகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இதனால் கலையரசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட, தற்கொலை செய்துகொள்கிறார் கலையரசன். இதனால் மனவேதனை அடைந்த சூர்யா ஒரு குழுவை அமைக்கிறார். அந்த குழுவின் மூலம் ஊழல் மற்றும் பணத்தை பதுக்குபவர்கள் ஆகியோரின் பெயர்களை கண்டுபிடித்து சுரேஷ் மேனன் பெயரை வைத்து பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். சுரேஷ் மேனன் பெயரை வைத்து கொள்ளை அடிப்பவர்களை கண்டுபிடிக்க ஒரு குழு  அமைக்கப்படுகிறது.

அந்த குழுவின் தலைவராக நவரச  நாயகன் கார்த்திக் அறிமுகமாகிறார். இறுதியாக இந்த படத்தில் கொள்ளையடிக்கும் கும்பலை கார்த்திக் கண்டுபிடித்தாரா? இல்லையா?..கொள்ளை அடித்த பணத்தை சூர்யா என்ன செய்தார்?..என்பதே மீதி கதை. முன்னதாக சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்களில் சூர்யாவின் ஆக்ரோஷத்தை மட்டுமே காண முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதியான கலகலப்பான சூர்யாவை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு செந்திலை காண முடிந்த ரசிகர்களுக்கு அவரது நடிப்பால் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், தம்பி ராமையா, யோகி பாபு, கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அனிருத்தின் இசை திரையரங்கில் ரசிகர்களின் ஆட்டத்தால் அரங்கை அதிர வைத்தது. இந்த பொங்கல் சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' கொண்டாட்டம் தான்.

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைவிமர்சனம்