ads
முதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்த விக்ரம் சூர்யா
விக்னேஷ் (Author) Published Date : Jan 12, 2018 13:50 ISTபொழுதுபோக்கு
முன்னணி நடிகர்களான விக்ரம், சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச்' போன்ற படங்கள் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் 'குலேபகாவலி' படமும் இன்று வெளிவந்துள்ளது. முன்னதாக இந்த மூன்று படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருகி வந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ள சில படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தள்ளி போனது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து இந்த 'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச்', 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்துள்ள 'ஸ்கெட்ச்' படத்தின் ஆக்சன் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பின்னணி இசை மற்றும் சூர்யாவின் புதுவித தோற்றம் போன்றவை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்துள்ளது.
இன்று முதல் நாள் காட்சியான 6:00AM மணி காட்சியை கண்டு கழிக்க நடிகர் சூர்யா சென்னையில் உள்ள காசி திரையரங்கிற்கும், நடிகர் விக்ரம் வெற்றி திரையரங்கிற்கும் சென்று ரசிகர்களுடன் படத்தை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மேலும் பிரவுதேவா மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்துள்ள 'குலேபகாவலி' படத்தில் காமெடி காட்சிகள் மற்றும் பிரபுதேவாவின் நடனம் போன்றவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
. @Suriya_offl is here for his #AnbaanaFans. #TSKFDFS pic.twitter.com/MCbZ8akaac
— Kasi Theatre (@kasi_theatre) January 12, 2018