ads

ஸ்கெட்ச் படத்தின் ப்ரமோஷனில் விக்ரம் தமன்னா நடனம் - வீடியோ

sketch movie promotion vikram tamannah dance

sketch movie promotion vikram tamannah dance

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் 'ஸ்கெட்ச்' படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான இவர் ஒரு நடிகராக 40 படங்களுக்கு மேல் வித்தியாசமான கதாபத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தமிழில் 2015-இல் சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த 'வாலு' படம் இவருடைய எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது விக்ரம் நடிப்பில் 'ஸ்கெட்ச்' படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தினை மூவிங் பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக முதன் முறையாக தமன்னா இணைந்துள்ளார். இவர்களுடன் சூரி, வேல ராமமூர்த்தி, ரவி கிஷன், விஸ்வாந்த், ஸ்ரீமான், ஆர்கே சுரேஷ், ராதாரவி ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு நண்பன் கதாபத்திரத்தில் நடிகர் விஸ்வாந்த் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் தமன், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டு வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இசையமைப்பாளராக தமிழில் 'சிந்தனை செய்' படத்தில் அறிமுகமானார்.

தெலுங்கில் இவரது இசையமைப்பில் வெளிவந்த 'கிக்' படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. முன்னதாக 'ஸ்கெட்ச்' படத்தின் போஸ்டர், டீசர், இசை, வீடியோ ப்ரோமோ போன்றவை வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விக்ரம் மற்றும் தமன்னா இணைந்து ஸ்ரீராம் கல்லூரியில் ஆட்டம், பாட்டத்துடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். தற்போது இந்த விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.  

sketch movie promotion vikram tamannah dancesketch movie promotion vikram tamannah dance