ads
தெலுங்கில் வெளியாகும் விக்ரமின் ஸ்கெட்ச்
ராசு (Author) Published Date : Dec 29, 2017 12:49 ISTபொழுதுபோக்கு
விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். இந்த ஜோடி இப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைவது குறிப்பிட்ட தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து ஸ்ரீ பிரியங்கா, சூரி, மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உட்பட திரைத்துறை நட்சத்திரங்கள் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர உள்ள இப்படத்தினை மூவிங் பிரேம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் தமன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரூபன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர், டீசர் மற்றும் 'அட்சி புட்சி' சிங்கிள் வீடியோ போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் டீசரில் விக்ரமின் ஸ்கெட்ச் டைலாக்ஸ் அதிகளவு வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் புதிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் படத்தினை தெலுங்கு திரையுலகில் வெளியிடுவதாகவும், தெலுங்கு திரையுலகில் வெளியீட்டு உரிமையை சுரேஷ் ப்ரொடெக்சன் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் படத்தினை புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 26ல் வெளியிட உள்ளனர். இந்நிலையில் இன்று தெலுங்கில் வெளிவந்த ஸ்கெட்ச் படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகிறது.