ads

விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் இணையும் ஆண்ட்ரியா

sketch movie songs

sketch movie songs

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ மற்றும் ஹரியின் ‘சாமி 2’ போன்ற படங்களில் முதலில் வெளிவர உள்ள படம் ஸ்கெட்ச். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தின் நாயகியாக தமன்னா இணைந்துள்ளார். மேலும் சீயான் விக்ரம் இப்படத்தில் புது வித கெட்டப்பில் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.    

 ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து அவரே வெளியிடயுள்ளார். விக்ரமுடன் இணைந்து  ஸ்ரீ பிரியங்கா, சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் மெகாலி, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் சேர்ந்து நடித்து வருகின்றனர். படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த போஸ்டர், டீசர் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் 'அட்சி புட்சி' என்ற சிங்கிள் வீடியோ வருகிற 25ம் தேதி வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளனர். 

படத்தின் அனைத்து வித பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும்  நிலையில்  படத்தின் இசையமைப்பாளர் தமனுடன் இணைந்து நடிகை, பாடகர் ஆண்ட்ரியா ‘தாடிக்காரா' என்று தொடங்கும் பாடலை பாடியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த செய்தியை இசையமைப்பாளர் தமன் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

andrea joines sketch movieandrea joines sketch movie

விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் இணையும் ஆண்ட்ரியா