ஸ்கெட்ச் படத்தின் 'சீனி சில்லாலே' பாடல்

       பதிவு : Dec 27, 2017 20:50 IST    
cheeni chillaallee song release cheeni chillaallee song release

இயக்குனர் விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'ஸ்கெட்ச்'. இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை தமன்னா களமிறங்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் புதுவித ஸ்டில்ஸ் வெளியானது. இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவுள்ளது. நாளுக்கு நாள் புதுவிதமாக படத்தின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 'சீனி சில்லாலே' என தொடங்கும் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

 


ஸ்கெட்ச் படத்தின் 'சீனி சில்லாலே' பாடல்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்