ads

நடிகர் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தின் புது ஸ்டில்ஸ்

sketch movie new stills

sketch movie new stills

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி த்ரில்லர் படம் 'துருவநட்சத்திரம்'. இந்த படத்தினை தொடர்ந்து சீயான் விக்ரம் தர லோக்கல் கெட்டப்பில் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சீயான் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா இணைந்துள்ளார். இந்த ஜோடியுடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா, சூரி நடித்து வருகின்றனர். மேலும் பேசப்படும் கதாபாத்திரத்தில் மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் நடித்துள்ளனர்.

பொங்கல் திருநாளுக்கு விருந்தளிக்க வரும் இப்படத்தில் தமன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரூபன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். நடிகர் விக்ரம் படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கியதோடு டப்பிங்கில் புது வித குரலையும் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் கடந்த நாட்களில் வெளிவந்த போஸ்டர், டீசர் மற்றும் 'அட்சி புட்சி' சிங்கிள் வீடியோ போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் பல புதுவித புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் விக்ரமின் ஸ்டெயில் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறது.     

sketch movie new stillssketch movie new stills