ads
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புது ஸ்டில்ஸ்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jan 07, 2018 12:27 ISTMovie News
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடமான வில்லன் கதாபத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் கேங் என்ற தலைப்பில் வெளிவர உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ல் வெளிவர உள்ளது.
இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெகுவான வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை அடுத்து 'கேங்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கான்வென்ஷனில் (JRC Conventions) நடந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளிவர உள்ளது. தற்போது இந்த படத்தின் மலையாள போஸ்டர்கள் வெளியானது. இதனை அடுத்து இந்த படத்தின் புது வித போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் சொடக்கு பாடலினால் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்திற்கு தடை ஏதும் இல்லை என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புது ஸ்டில்ஸ்
-   Tags : 
thaanaa serndha kootam ua certified
thaanaa serndha kootam theater runing time
thaanaa serndha kootam malayalam poster
thaanaa serndha kootam malayalam first look poster
thaanaa serndha kootam official
பொங்கலுக்கு வெளிவரும் படங்கள்
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் யு ஏ சான்றிதழ்
சூர்யா படத்திற்கு யு ஏ சான்றிதழ்
தானா சேர்ந்த கூட்டம் புதிய தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்
தானா சேர்ந்த கூட்டம்
thaana serntha kootam movie new stills and posters
thaana serntha kootam movie release date
thaana serntha kootam movie song issue cleared
Related News
ads