சூர்யாவின் 37வது படத்தில் இணையும் அமிதாப்பச்சன்

       பதிவு : Jan 06, 2018 17:10 IST    
amitabh bhachchan joined in suriya 36 movie amitabh bhachchan joined in suriya 36 movie

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தினை தொடர்ந்து சூர்யாவின் 36வது படத்தினை இயக்குனர் செல்வா ராகவன் இயக்கவுள்ளார். இந்த தகவல் சில நாட்களுக்கு முன்பே வெளியிட பட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த நாட்களுக்கு முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் படக்குழு வலைத்தளத்தில் வெளியிட்டது. மேலும் இந்த படத்தில் நாயகியாக 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சூர்யாவின் 37வது படத்திற்கான தகவல் வெளிவந்திருந்தது. சூர்யா தனது 37 வது படத்தினை அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கிய கேவி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கயுள்ளார். சூர்யாவின் 37வது படத்தின் மூலம் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, கலை கவிஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர் -நடிகைகள் மற்றும் நாயகிகள் தேர்வு நடைபெற்று இருக்கும் இந்நிலையில் படத்தின் முக்கிய வேடத்தில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பட்சனை நடிக்கவைப்பதற்கு பேச்சிவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் இது வரை தமிழ் திரையுலகில் அறிமுகமானதில்லை. இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தற்பொழுது உருவாகி கொண்டிருக்கும் வரலாற்று சார்ந்த படமான 'சை ரா' படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அடுத்த படியாக சூர்யாவின் 37வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


சூர்யாவின் 37வது படத்தில் இணையும் அமிதாப்பச்சன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்