ads

டாவில் களமிறங்கிய கயல் சந்திரன்

டாவில் களமிறங்கிய கயல் சந்திரன்

டாவில் களமிறங்கிய கயல் சந்திரன்

கயல் படத்தின் மூலம் அறிமுகமான சந்திரன் முதல் படத்திலையே ரசிகர்களின் மனதில் நம்பத்தக்க நடிகராக இடம்பிடித்தார். இதனை தொடர்ந்து இவர் நடித்த ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி போன்ற படங்கள் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். காதலும் நகைச்சுவையும் கலந்த இப்படத்திற்கு டாவு என இளைஞர்களை கவரும் தலைப்பு சூட்டியுள்ளனர்.     

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவர் பி.எஸ்.ரகுநாதன், ‘Two Movie Buffs’ என்ற பட நிறுவனம் சார்பில், இந்த புது படத்தினையும் தயாரிக்கவுள்ளார். மேலும் காதல், காமெடி கலந்து உருவாக உள்ள 'டாவு' படத்தில் சந்திரனுடன் இணைந்து முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா போன்றவர்கள் நடிக்கயிருப்பதாகவும் நாயகிக்கான தேர்வு நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு பணியில் இணைந்துள்ளனர். இந்நிலையில் படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.    

டாவில் களமிறங்கிய கயல் சந்திரன்