என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கு நன்றி - கீர்த்தி சுரேஷ்

       பதிவு : Mar 22, 2018 16:31 IST    
நடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு, டிவிட்டரில் படக்குழுவினருக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு, டிவிட்டரில் படக்குழுவினருக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகி வரும் படம் 'நடிகையர் திலகம்'. மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற தலைப்பிலும், தெலுங்கில் 'மகாநதி' என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேசும், சாவித்ரியின் காதலனாக ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானும், பத்திரிகை நிருபராக மதுரவாணி கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். சமீபத்தில் நடிகை சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.  

 

அதில் "இந்த படத்தின் ஒரு வருட இனிமையான பயணம் தற்போது நிறைவடைந்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் நாக் அஸ்வினுக்கும், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்திற்கும் நன்றி. மறைந்த சாவித்ரியை திரும்ப பார்ப்பதில் நாம் பெருமையடைகிறோம். இந்த படத்தை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த படம் வரும் மே மாதம் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்த படத்திற்கு தெலுங்கு மற்றும் கன்னட இசையமைப்பாளர் மிக்கி ஜெ மேயர் இசையமைத்துள்ளார். 


என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கு நன்றி - கீர்த்தி சுரேஷ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்