ads
கேணி இயக்குனருக்கு சிறந்த கதாசிரியருக்கான விருது
வேலுசாமி (Author) Published Date : Mar 10, 2018 12:13 ISTபொழுதுபோக்கு
தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 23-இல் வெளியான படம் 'கேணி'. இந்த படத்தை மலையாளத்தில் 'கிணற்' என்ற தலைப்பில் வெளியிட்டனர். தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை மலையாள இயக்குனர் எம்ஏ நிஷாத் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படையாக தேவைப்படுவது தண்ணீர் தான். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான இந்த தண்ணீரை ஒவ்வொரு மாநிலங்களிலும் அணைக்கட்டி தடுத்து உபயோகித்து வருகின்றனர்.
இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டிய தண்ணீருக்காக யார் யாரிடமோ மன்றாட வேண்டியுள்ளது. தன் போக்கில் ஓடி கொண்டிருந்த தண்ணீரை சுய தேவைக்காக உபயோகித்த நினைத்ததால் விவசாயமும், வளங்களின் செழிப்பும் அழிந்து வருகிறது. இதனை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இயக்குனர் நிஷாத் 'கேணி' படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் தண்ணீர் என்பது பொதுவானது தானே.. அதை மனிதர்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்..என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருந்தார். இந்த படம் தமிழ் மலையாள உலகில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் தமிழ்நாடு கேரளா எல்லையில் நடக்கும் பிரச்சனையை மையமாக கொண்ட இந்த படம் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இருந்ததால் கேரளாவில் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
ஆனால் தற்போது இந்த படத்திற்கு கேரளா அரசு சிறந்த கதாசிரியருக்கான விருதை இயக்குனர் நிஷாத்துக்கு அளித்து கவுரவித்துள்ளது. பொதுவான நீதியை இந்த படத்தில் தெரிவித்ததால் எதிர்ப்புகளை தாண்டி இந்த படத்திற்கு கேரளா அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கேரளா சினிமா விருதுகள் 2018 :
- Best character actor - Alencier Ley (Thondimuthalum Driksakshiyum)
- Best character actress - Pauly Valsan ( Ee Ma Yau)
- Best child actors - Master Abhinad (Swanam), Nakshatra (Rakshadhikari Baiju)
- Best Director - Lijo Jose Pallissery ( Ee Ma Yau)
- Best debut director - Mahesh Narayanan (Take Off)
- Best cinematographer - Manesh Madhavan
- Best screenplay adaptation - S Hareesh, Sanju Surendran (Eden)
- Best editing- Appu Bhattathiri (Ottamuri Velicham and Veeram)
- Best Art director- Santhosh Raman (Take Off)
- Best script - Sajeev Paravoor (Thondimuthalum Driksakshiyum)
- Best script writer - MA Nishad (Kinar)
- Best adopted screenplay - Eden ( S Harish, Sanju Surendran)
- Best composer - M K Arjunan (Bhayanakam)
- Best singer (male) - Shahabaz Aman (Mayanadhi)
- Best singer (female) - Sithara Krishnakumar (Vanamakalunnuvo, Vimanam)
- Best lyrics – Prabha Varma (Clint)
- Best background score - Gopi Sunder (Take Off)