ads

விஜய் அட்லீ கூட்டணியில் இணைந்துள்ள பாலிவுட் நடிகை

விஜய் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள கூட்டணியில் நாயகியாக பாலிவுட் நடிகை நடிக்க உள்ளார்.

விஜய் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள கூட்டணியில் நாயகியாக பாலிவுட் நடிகை நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவரான விஜய் தற்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் இணைந்து 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜயின் 63 வது படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் தளபதி 63 படத்தின் இயக்குனராக மீண்டும் அட்லீ உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் அட்லீ கூட்டணி இணைந்துள்ளது.

மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து விஜயின் அடுத்த படத்திற்கும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவன் இவன், மாற்றான், தனி ஒருவன், கவண் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் நாயகி குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது விஜயின் 63வது படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அட்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னதாக கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான 'எம்எஸ் தோனி' மற்றும் மகேஷ் பாபுவின் 'பரத் எனும் நான்' போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பது உறுதியானால் இந்த படத்தின் மூலம் இந்தி, தெலுங்கு திரையுலகிற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்க படுகிறது.

தளபதி 63 படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார்.தளபதி 63 படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார்.

விஜய் அட்லீ கூட்டணியில் இணைந்துள்ள பாலிவுட் நடிகை