நயன்தாராவின் புது படத்தை தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ்

       பதிவு : Feb 05, 2018 17:41 IST    
nayanthara new movie with maa short film director nayanthara new movie with maa short film director

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'அறம்'. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரித்திருந்தார். இந்த படம் கேஜேஆர் ஸ்டுடியோஸின் முதல் படமாகும். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா, ஹன்சிகா நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் படம் 'குலேபகாவலி'. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது இரண்டாவது படமாக தயாரித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது மூன்றாவது படமாக நடிகை நயன்தாரா நடிக்கும் புது படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை 'மா' என்ற குறும்படத்தை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் கேஎம் இயக்க உள்ளார். இயக்குனர் சர்ஜுன் இயக்கிய 'மா' என்ற குறும்படம் தற்போது ரசிகர்களிடம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த படம் 28 லட்சம் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் நடிகை கனி குசுருட்டி மற்றும் அனிகா ஆகியோர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜெ ராஜேஷ் தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

nayanthara new movie with maa short film directornayanthara new movie with maa short film director

நயன்தாராவின் புது படத்தை தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்