காலா ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல - லைக்கா நிறுவனம்

       பதிவு : Mar 22, 2018 10:06 IST    
லைக்கா நிறுவனம் தற்போது டிவிட்டரில் காலா வெளியீடு தேதி குறித்த தகவலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளது. லைக்கா நிறுவனம் தற்போது டிவிட்டரில் காலா வெளியீடு தேதி குறித்த தகவலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 'கபாலி' படத்திற்கு பிறகு காலா, 2.0 போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. இதில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள '2.0' படம் சிறந்த நவீன தொழில் நுட்ப முறையில் உருவாகி வருகிறது. ரோபோட்டிக் படம் என்பதால் அதிகளவு கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறும். இதற்காக ரசிகர்களின் சற்றும் எதிர்பாராத அளவிற்கு ஹாலிவுட் தரத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இதனால் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதனை கண்டு படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. விரைவில் படக்குழு ட்ரைலர் மற்றும் வெளியீடு தேதியை அறிவிக்க உள்ளனர். 2.0 படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'காலா'. முன்னதாக இந்த படத்தின் டீசரை கடந்த மார்ச் 1-ஆம் தேதி படக்குழு வெளியிட்டது.

 

இந்த படத்தின் டீசர் தற்போது வரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடுவதாக நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் தெரிவித்தார். ஆனால் தற்போது நிலவி வரும் தயாரிப்பாளர் சங்க போராட்டமும், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டமும் இந்த படத்திற்கு எதிராக உள்ளது.

இதனால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த படம் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது லைக்கா நிறுவனம் தனது டிவிட்டரில் "காலா வெளியீடு தேதி குறித்த அறிவிப்பை லைக்கா நிறுவனம் தற்போதுவரை தெரிவிக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் இது குறித்து தகவல் வெளியானால் அதற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை" என தெரிவித்துள்ளது.

 

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ரஜினிகாந்த் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருக்கின்றனர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 2.0 மற்றும் காலா படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் காலா வெளியீடு தேதி அறிவித்து அதற்காக காத்திருக்கும் நிலையில் காலா படம் தள்ளிப்போவது ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. 


காலா ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல - லைக்கா நிறுவனம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்