ads
மகேஷ் பாபுவின் 24வது பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ராதிகா (Author) Published Date : Jan 26, 2018 15:10 ISTMovie News
ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'ஸ்பைடர்' படத்தினை தொடர்ந்து மகேஷ் பாபு தனது 24வது படத்தினை கொரட்டால சிவா இயக்கத்தில் அரசியலை சார்ந்த ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் முதலமைச்சர் கெட்டப்பை மகேஷ் பாபு கையாண்டுள்ளார். இவருடன் இணைந்து முக்கிய வேடத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்திற்கு ‘பாரத் அனே நேனு’என்ற தலைப்பினை வைத்திருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தியதோடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் ஹிந்தி பட நடிகை கியாரா அத்வானி நாயகியாக இணைந்துள்ளார். இவர் முதல் முதலாக இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
பல வெற்றி படங்களை கொடுத்துள்ள பிரபல 'DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் DVV தனய்யா அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இவர் ஒரே ஆண்டில் தெலுங்கில் 8 படங்களுக்கு இசையமைத்து தெலுங்கு திரையுலகில் சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவி.கே.சந்திரன் - திரு ஒளிப்பதிவு பணியில் ஈடுபட ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.
தற்பொழுது வெளிவந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடந்து ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக மகேஷ் பாபு பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் போது தெலுங்கு மொழியில் வெளிவந்த ஆடியோ வசனத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஆடியோ பதிவு வலைத்தளத்தில் பரவி வருவதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகிறது.
adsBharath takes office :)#BharathAneNenu pic.twitter.com/4TNVHp6ZyV
— Mahesh Babu (@urstrulyMahesh) January 26, 2018
மகேஷ் பாபுவின் 24வது பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்
-   Tags : 
mahesh babu 24th movie title bharath ane nenu
mahesh babu 24th film
mahesh babu new film title poster release
mahesh babu first look poster release
bharath ane nenu
bharath ane nenu telugu film
bharath ane nenu movie
mahesh babu new film updates
bharath ane nenu official
மகேஷ் பாபுவின் புது பட டைட்டில் வெளியீடு
மகேஷ் பாபு 24வது படம்
மகேஷ் பாபு புது பட டைட்டில் பாரத் அனே நேனு
மகேஷ் பாபு புது பட டைட்டில் வெளியீடு
மகேஷ் பாபு
மகேஷ் பாபு புது பட தகவல்
Related News
ads