ads

தமிழில் வெளியாகும் மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம்

தமிழில் வெளியாகும் மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம்

தமிழில் வெளியாகும் மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம்

ஸ்ரீகாந்த இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'பிரம்மோற்சவம்' படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா, சத்யராஜ், நாசர், ரேவதி, ஜெயசுதா உள்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்க,  ரத்னவேல் ஒளிப்பதிவு செய்த்துள்ளார்.

இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட பல படங்களை தயாரித்த  பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில், பத்ரகாளி பிரசாத், 'பிரம்மோற்சவம்' படத்தினை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை பெற்றுள்ளார். ஏ.ஆர்.கே. ராஜராஜா இயக்கவிருக்கும் இப்படத்தினை தமிழில் அனிருத் என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர்.      

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் அன்பாலும், உறவிலும் பிணைக்கப்பட்டுள்ளன. அப்படி குடும்ப உறவுகளை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நம் மீது அன்பை செலுத்தி நம்முடனே இருக்கும் உறவுகளை நாம் பெரிதும் மதிப்பதில்லை. அவர்கள் நம்மை விட்டு சென்ற பிறகு தான் அதன் கஷ்டத்தை உணரமுடியும். அப்படி அன்பான உறவை இழந்த நாயகன் அவனது ஏழு தலைமுறைகளின் உறவுகளை தேடி கண்டுபிடிப்பது தான் கதையின் மையக்கருத்து.        

தமிழில் வெளியாகும் மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம்