குயின் படத்தின் நாயகிகள் - வைரலான புகைப்படம்

       பதிவு : Nov 03, 2017 19:10 IST    
குயின் படத்தின் நாயகிகள் - வைரலான புகைப்படம்

விகாஷ் பால் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு கங்கனா ரனவ்த் நடிப்பில் இந்தியில் வெளியான ‘குயின்' படத்திற்கு அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது. இப்படத்தினை தென்னிந்திய மொழிகளில் எடுப்பதற்கு இயக்குனர் ரமேஷ் அரவிந்த் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் எடுக்க உள்ளார். 

தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் போன்றவர்கள் நடிக்கும் இப்படத்தினை பிரான்ஸ் நாட்டில் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே சமயத்தில் ஒளிப்பதிவு செய்வதன் காரணத்தினால் நான்கு நாயகிகளும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர்.     

 

படத்தின் அம்சமாக நான்கு நாயகிகளும் கைகளில் மெகந்தியுடன் பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற போது அவர்களின் கைகளில் உள்ள மெகந்தியை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் இப்படத்தினை ஒரே நேரத்தில் நான்கு மொழிகளிலும் வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது.       

 


குயின் படத்தின் நாயகிகள் - வைரலான புகைப்படம்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்