குயின் படத்திற்காக உடல் பயிற்சி -தமன்னா

       பதிவு : Nov 11, 2017 12:00 IST    
குயின் படத்திற்காக உடல் பயிற்சி -தமன்னா

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் விறுவிறுப்பாக நடந்து வரும் குயின் படத்தின் படப்பிடிப்பில் தமன்னா, காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், பருல் யாதவ் போன்றவர்கள் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி பாரிசில் படமாக்கப்பட்டு வருகின்றனர்.      

 இந்தியில் 2014-ஆம் ஆண்டு கங்கனா ரனவ்த் நடிப்பில் விகாஷ் பால் இயக்கத்தில் வெளிவந்த குயின் படத்திற்கு அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வாயகம் நிறுவனம் வெளியிட்டது.  

 

இந்த படத்தின் கதையில், கங்கணாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தேனிலவு பாரீசில் நடக்கவேண்டும் என்று விரும்பிய கங்கனா, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். இந்நிலையில் மணமகனுக்கு இதில் விருப்பம் இல்லாததால் திருமணம் நின்று விடுகிறது. ஹனிமூனுக்கு போகவில்லையென்றால் என்ன தனியாக செல்கிறேன் என்று பாரிஸுக்கு கங்கனா செல்கிறார். இதன் பிறகு அவளின் வாழ்க்கையில் புது வித தோற்றத்தையும் நம்பிக்கையும்  பாரிஸில் கற்றுக்கொண்டு இறுதியில் வீட்டிற்கு செல்கிறாள். அதன் பிறகு திருமணத்திற்கு மணமகன் சம்மதிக்க கங்கனா மறுத்து விடுகிறார். இது இக்கதையில் சுருக்கம்.      

இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள தமன்னா, இந்த படத்திற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறைக்கு மேலாக உடல் பயிற்சியை ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வந்துள்ளது. சென்னையில் தொடர்ந்த இந்த பயிற்சி இப்பொழுது பரிசிலும் நடைபெறுகிறதாம்.     

 


குயின் படத்திற்காக உடல் பயிற்சி -தமன்னா


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்