இப்படை நிச்சயம் வெல்லும் மு.க.ஸ்டாலின்

       பதிவு : Nov 07, 2017 13:37 IST    
இப்படை நிச்சயம் வெல்லும் மு.க.ஸ்டாலின்

இயக்குனர் கவ்ரவ் நாராயணன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த 'இப்படை வெல்லும்' படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, கவ்ரவ் நாராயணன் மற்றும் சிலர் நடித்து நாளை மறுநாள் வெளிவர உள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த அனைத்து படங்களையும் வெளியிடுவதற்கு முன்பாக எவ்வளவு வேலை இருந்தாலும், அதனை ஒதுக்கி வைத்து தவறாமல் மகனின் படத்தினை மு.க.ஸ்டாலின் பார்த்து விடுவார். அது போன்று இப்படை வெல்லும் படத்தினை குடும்பத்தோடு பார்க்க சென்ற மு.க.ஸ்டாலினை இயக்குனர் கவ்ரவ் நாராயணன், தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் மற்றும் சிலர் அவர்களை வரவேற்றனர்.

 

இதனை தொடர்ந்து படத்தினை பார்த்த மு.க.ஸ்டாலின் பாராட்டியதோடு 'இப்படை நிச்சயம் வெல்லும்' என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் மெர்சல் படத்தினை போன்று இப்படத்திற்கும் சில விமர்சனங்கள் வந்த நிலையில் H.ராஜா படம் ஒட்டாது என்று நேரடியாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் சொன்னது போன்று படம் வெல்லுமா இல்லை H.ராஜா சொன்னது போன்று நடக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 


இப்படை நிச்சயம் வெல்லும் மு.க.ஸ்டாலின்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்