ஹச்.ராஜா கொஞ்சம் கருணை காட்டுங்க - உதயநிதி ஸ்டாலின்

       பதிவு : Nov 05, 2017 17:10 IST    
ஹச்.ராஜா கொஞ்சம் கருணை காட்டுங்க - உதயநிதி ஸ்டாலின்

மெர்சல் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதற்கு முழுக்க காரணம் பா.ஜ.க-வை சேர்ந்த ஹச்.ராஜா மற்றும் தமிழிசை ஆகியோர். இதனால் பல தரப்பினரிடையே ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தது. மெர்சல் படத்திற்கு வழக்கு தொடர்ந்ததற்கு உயர்நீதிமன்றம் மெர்சல் படத்தில் என்ன குறை கண்டீர், பிடிக்கலைன்னா பாக்காதீங்க என்ற சரமாரியாக கேள்வி எழுப்பியது. இதனை அடுத்து மெர்சல் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று மக்கள் அவளுடன் பார்க்க சென்றனர். இதனால் மெர்சல் படம் வசூலில் அள்ளியது. தற்போது அதற்கு விஜய் தரப்பில் பார்ட்டியும் நடந்து முடிந்தது.

மெர்சல் படம் வெற்றிபெற செய்த ஹச்.ராஜாவிடம் திரைப்பட இயக்குனர்கள் தற்போது அவர்களிடம் எங்களுக்கு பாத்து பண்ணிவிடுங்க என்று கெஞ்சி வருகின்றனர். சமீபத்தில் பலூன் பட இயக்குனர் "நான் 'பலூன்' என்று ஒரு படம் பண்ணி வச்சிருக்கேன். புரமோஷனுக்கு காசு இல்ல எங்களையும் கொஞ்சம் பாருங்க" என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த சமூக ஆர்வலர்கள் "அதெல்லாம் நல்லா பண்ணுவார். தல பாத்து பண்ணிவிடு" என்று ஹச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பினர்.

 

இதனை அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'இப்படை வெல்லும்' இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. இந்த படத்திற்கு பல தரப்பினரிடம் ஆதரவு பெருகுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "மெர்சல் படத்திற்கு முழு புரமோஷன் கொடுத்தது பா.ஜ.க தான். என்னுடைய படத்திற்கும் ஹச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம்னு நினைக்கிறன்" என்று பா.ஜ.க உதவியை தற்போது நாடி வருகிறார் உதய நிதி ஸ்டாலின்.


ஹச்.ராஜா கொஞ்சம் கருணை காட்டுங்க - உதயநிதி ஸ்டாலின்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்