படத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா

       பதிவு : Nov 06, 2017 20:00 IST    
படத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் "இப்படை வெல்லும்". இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். வரும் 9-ஆம் தேதி வெளிவரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்திற்காக நடிகை ராதிகா பஸ் ஓட்ட பயிற்சி எடுத்துள்ளார்.

இது பற்றி இயக்குனர் கெளவ்ரவ் நாராயணன் கூறியது, "இந்த படத்தில் நடிகை ராதிகா தாய் வேடத்தில் நடித்துள்ளார். மிகவும் துணிச்சலான பெண் வேடம் என்பதால் ராதிகா நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். முதலில் தயங்கிய அவர், பிறகு கதையின் முக்கியத்துவம் அறிந்து ஒப்புக்கொண்டார். 

 

பஸ் ஓட்டுவதற்காக மூன்று நாட்கள் விசேஷ பயிற்சி மேற்கொண்டார். திருவண்ணாமலை பஸ் நிலையத்திலிருந்து பைபாஸ் ரோட்டுக்கு பஸ்ஸை ஒட்டி வரும் காட்சியில் துணிச்சலுடன் நடித்துள்ளார். அதுவும் பேசிக்கொண்டே நடித்துள்ளார். அவர் நினைத்திருந்தால் நிற்கும் பஸ்ஸிலோ அல்லது அவருக்கு க்ளோசப் வைத்தோ காட்சியை எடுத்திருக்க முடியும். ஆனால் காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று அவரே நடித்துள்ளார்." என்று அவர் கூறினார்.


படத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்

செய்தியாளர் அலுவலக முகவரி
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
செய்தியாளர் கைபேசி எண்
9514514874
செய்தியாளர் அலுவலக எண்
+914224398003
செய்தியாளர் மின்னஞ்சல்
raghulmuky054@gmail.com